நேபாளத்தில் முதல் பெண் பிரமதர் பொறுப்பேற்றார்.


நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பொறுப்பேற்றுள்ளார். 

ஊழலுக்கு எதிராக ஒரு வாரமாக நீடித்த கடும் போராட்டங்களுக்குப் பின்னர் நேபாளம் ஒரு இடைக்காலப் பிரதமரை நியமித்துள்ளது. இதற்கிடையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். மார்ச் 5 ஆம் திகதி தேர்தல் நடத்த திகதி நிர்ணயிருக்கப்பட்டுள்ளது.

இடைக்காலப் பிரதமர் பொறுப்பேற்றதை அடுத்து தலைநகர் காத்மண்டுவில் அன்றாட வாழ்க்கை திருப்ப வழி வகுத்தது.

நகரத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. வீதிகளில் நிலை நிறுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்த வாரத் தொடக்கத்தில் நேபாளம் முழுவதும் இளைஞர்களால் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் "GenZ" என அழைக்கப்பட்டன. 

வெகுண்டெழுந்த போராட்டங்கள் காரணமாக அரசாங்க கட்டிடங்கள், நாடாளுமன்றம் என்பன தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தினால் கட்கா பிரசாத் ஒலி தலைமையிலான முன்னைய அரசாங்கம் கவிந்தது. என்பது நினைவூட்டத்தக்கது.


No comments